முத்துஜயன் கட்டு குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன!

மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முத்து ஜயன் கட்டுக்குளத்தின் நீர்மட்டம் 26 அடியாக உயர்ந்து வான்பாயத்தொடங்கியுள்ளது.


24 அடி கொள்ளவு கொண்ட குளத்தின் நான்கு வான் கதவுகளும் இன்று 22.12.18 காலை நீர்பாசன திணைக்கள பொறியலாளரால் திறந்துவிடப்பட்டுள்ளன.


கடந்த 2015 ஆம் ஆண்டு அறுநூறு மில்லியன் ரூபா செலவில் புனரமக்கப்பட்ட குளத்தின் நீர்மாட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக நீர் வரத்து குறைவாக கணப்பட்ட நிலையில் கடந்த இரவு ஒரு நாள் பெய்த மழையினால் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

26 அடியாக உயர்ந்து 02 அடி வான் பாய்ந்த நிலையில் குளத்தின் நான்கு கதவுகளில் 03 வான் கதவுகள் 10 இஞ்சியாகவும், 01 வான்கதவு 20 இஞ்சியாகவும் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போதும் குளத்திற்கான நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.


குளத்தின் நீர்மட்டம் கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு பெய்த மழையினால் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
வன்கதவுகள் ஊடாக நீர்பாய்வதை மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here