முல்லைத்தீவு மாவட்டத்தில் 3794 குடும்பங்களை சேர்ந்த 12 651 மக்கள் பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரத்தி எழுநூற்றி தொன்னூற்றி நான்கு குடும்பங்களை சேர்ந்த 12ஆயிரத்தி 651 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த (22) இரவு ஒருநாள் பெய்த கடும் மழைவெள்ளத்தினால் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மழைவெள்ளம் பெருக்கெடுத்து வீதிகளை மூடி மக்களின் வாழ்இடங்களை மூடி பாய்ந்துள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மக்களை 25 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மாணிக்கபுரம்,கோம்பாவில்,சிவநகர்,இரணைப்பாலை,மந்துவில்,மல்லிகைத்தீவு,வள்ளுவர்புரம்,தேராவில்,புதுக்குடியிருப்பு மேற்று,விசுவமடு மேற்கு,ஆனந்தபுரம்,புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதிகளில்  1891 குடும்பங்களை சேர்ந்த 6330 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இதில் 7 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 532 குடும்பங்களை சேர்ந்த 1546 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் ஏனைய மக்கள் பாதுகாப்பாக உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள்.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் பேராறு,திருமுறுகண்டி,பண்டாரவன்னி,இந்துபுரம்,கனகரத்தினபுரம்,புளியங்குளம்,தட்டையர்மலை,கூழாமுறிப்பு.மாங்குளம்,பளம்பாசி,பெரியகுளம்,பனிக்கன்குளம்,முத்துஜயன்கட்டு,முத்துவினாயகர்புரம்,தண்டுவான்,பெரிய இத்திமடு,மன்னாகண்டல்,ஆகிய கிராமங்களை சேர்ந்  739 குடும்பங்களை சேர்ந்த 2397 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பாதிக்கப்பட்ட மக்கள்  16 இடைத்தங்கல் முகாம்களில் 620 குடும்பங்களை சேர்ந்த 1989 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் ஏனையவர்கள் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளார்கள்
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் குமாரபுரம்,கேப்பாபிலவு, கணுக்கேணி தெற்கு,கருநாட்டுக்கேணி, முள்ளியாய்க்கால் மேற்கு.சிலாவத்தை தெற்கு,கள்ளப்பாடு தெற்கு,செல்வபுரம் ஆகிய கிராமங்களில் 822 குடும்பங்களை சேர்ந்த 2915 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இந்த பகுதியில் இரண்டு வீடுகள் முழுமையாகவும் மூன்று வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களில் 38 குடும்பங்களை சேர்ந்த 115 மக்கள் ஒரு இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில்  32 குடும்பங்களை சேர்ந்த 81 மக்கள் மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
துணுக்காய் பிரதேசத்தில் ஜயன்கன் குளம்,அனஞ்சயன் குளம்,புத்துவெட்டுவான்,பழையமுறுகண்டி,துணுக்காய்,பாரதிநகர்,கல்விளான்,தேறான்கண்டல்,தென்னியன்குளம்,கோட்டைகட்டியகுளம்,யோகபுரம் மேற்கு,ஆலங்குளம்,யோகபுரம் மத்தி,மல்லாவி கிராமங்களை சேர்ந்த 1891 கடும்பங்களை சேர்ந்த 6330 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் இவர்களில் ஒரு இடைத்தங்கல் முகாமில் 50 குடும்பங்களை சேர்ந்த 155 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகளிலும் பாதுகாப்பாக உள்ளாதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதுஇடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகள் மற்றும் அன்றாட தேவைகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வழங்கி வருகின்றது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்ட வசந்தபுரம் கிராம மக்கள் மன்னாகண்டல் அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையிலும் ,பேராறு அ.த.க.பாடசாலையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பாய்,உடுபுடவை,தறப்பாள் போன்ற அத்தியவசியமான பொருட்ளை மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதிகோதீஸ்வரன்,மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் உள்ளிட்டவர்கள் சென்று நேரடியாக பார்வையிட்டுள்ளதுடன் உதவி பொருட்களையும் வழங்கிவைத்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here