நித்தகை குளத்திற்கு சென்றவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள்!

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்டபட்ட நித்தகை குளத்தின் கீழ் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் ஜந்துபேர் கடந்த 21.12.18 அன்று வயல் காவலுக்கு சென்றுள்ளார்கள் இதன்போது 21ஆம் திகதி இரவு 22 ஆம் திகதி அதிகாலைவேளையில் பெய்த கடும் மழை காரணமாக நித்தகை குளவயல்பகுதியில்  இருந்து வெளியேறி ஆண்டான்குளத்து ஜயனார் கோவில் பகுதிவரை வந்துள்ளார்கள் 
அதன் பின்னர் அவர்கள் குமுழமுனை நோக்கி வரமுடியாத நிலையில்  காட்டாற்று மழைநீர் வயல் நிலங்கள் ஆறுகளை பெருக்கெடுத்து பாய்ந்துள்ளது இன்னிலையில் 22.12.18 அன்று மாலை 5.00 மணியளவில்  முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அவர்களின் நிலமைகளை தெரிவித்துள்ளார்கள் இதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுடன்  குறித்த ஜந்து விவசாயிகளையும் மீட்பதற்காக படையினரின் உதவியினை எழுத்துமூலம் கோரியுள்ள நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற படையினர் ஜவரையும் படகுமூலம் மீட்டு கடல்வளியாக நாயாற்று பகுதி வீதிக்கு கொண்டுவந்துள்ளார்கள் 
நாயாற்றுப்பகுதியில் வைத்து விவசாயிகள் ஜவரையும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.பிரதாபன் அவர்களிடம் படையினர் கையளித்துள்ளார்கள் பிரதேச செயலாளர் அவர்கள் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் குறித்த ஜந்து விவசாயிகளையும் மாவட்ட செயலகத்தில் வைத்து ஒப்படைத்துள்ளார்.
இதன்போது மாவட்ட செயலகத்தில் வைத்து விவசாயிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் அவர்களால் அனர்த்தம் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டு அவர்களை அவர்கள் இடங்களுக்கு கொண்டு சென்று விட்டுள்ளார்கள்.
இந்த சம்பத்தில் ஜந்து விவசாயிகளில் மூவர் கடந்த 08.11.18 அன்று நித்தகை குளம் உடைப்பெடுத்த போது வெள்ளத்தில் அகப்பட்டு பின்னர் அனர்த்த முகாமைத்துவத்தின் உதவியுடன் விமானப்படையிரின் உலங்குவானூர்தி கொண்டு மீட்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here